கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய சுருக்கம்

உங்களுக்குக் கவலைகள் ஏதும் இருந்தால், 1800 675 398-இல் (24 மணி நேர) ‘கொரோனா வைரஸ் (coronavirus )அவசர இணைப்’பினை அழையுங்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், ‘TIS நேஷனல்’ (TIS National)-ஐ 131 450-இல் அழையுங்கள்.
இலக்கம் ‘000’ -வை அவசரகாலங்களுக்கு மட்டுமென வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் அவசியம் நினைவில் கொள்ளவேண்டியவைகள்

 • வீட்டை விட்டு வெளியே போகும்போது முகக்கவசம் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக அணியவேண்டும்
 • மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சமாக 1.5 மீட்டர் தூர இடைவெளி விட்டு விலகியிருங்கள்
 • அடிக்கடி உங்களுடைய கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள்
 • உங்களுக்கு உடல் நலம் சரியில்லையெனில், வீட்டிலேயே இருங்கள். வேலைக்குப் போகாதீர்கள்
 • ஒரு திசுத்-தாளிற்குள்ளாகவோ அல்லது உங்களுடைய முழங்கை மடிப்பிற்குள்ளாகவோ இருமுங்கள் அல்லது தும்முங்கள்.
 • கோரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) நோய்த்தொற்று அறிகுறிகள் உங்களுக்கு ஏதேனும் இருப்பின், நோயறிவுச் சோதனையை கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும்
 • கொரோனா வைரஸ் நோயறிவுச் சோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். மெடிக்கேர் அட்டை (Medicare card) இல்லாதவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்த் தொழிலாளர்கள் மற்றும் அடைக்கலம் நாடிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதில் அடங்குவர்

இந்தப் பக்கத்தில்

 

விக்டோரிய மாநிலத்தின் தற்போதைய கட்டுப்பாட்டு அளவுகள்

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான மற்றும் சாதாரண கோவிட் நிலைக்கு (COVID Normal) விக்டோரிய மாநிலம் திரும்புவதற்கான படிநிலைகள் ‘கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) மீள்- துவக்கத் திட்டத்தில்’ கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன

மெல்பர்ன் மாநகரப் புறநகர்ப் பகுதிகளுக்கென ஒரு திட்டமும், விக்டோரிய மாநில ஊரகப் பகுதிகளுக்கென ஒரு திட்டமும் உள்ளன

சூழ்நிலை மாறினால், தலைமை மருத்துவ அதிகாரி (Chief Health Officer) கட்டுப்பாடுகளை மாற்றக் கூடும்.

மெல்பர்ன் மாநகரப் புற நகர்ப்பகுதிகள்

இரண்டாம் படி-நிலை: மெல்பர்ன் மாநகரப் புறநகர்ப் பகுதிகளில் 28 செப்டம்பர் 2020-இல் இருந்து

28 செப்டம்பர் 2020 காலை 5 மணியில் இருந்து மெல்பர்ன் மாநகரப் புறநகர்ப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏதும் இனி இருக்காது.

இந்த நான்கு காரணங்களில் ஒன்றை முன்னிட்டு நீங்கள் எந்நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம்:

 • உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை வாங்க
 • உடற்பயிற்சிக்காக (வெளிப்புற, மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகள்)
 • அனுமதிக்கப்பட்டுள்ளப் பணிக்காக
 • பராமரிப்பு அளிக்க, கருணை அடிப்படையிலான காரணங்களுக்காக அல்லது மருத்துவ சிகிச்சைப் பெற.

அத்தியாவசியமான பொருட்களை வாங்குதல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றிற்காக நீங்கள் உங்களுடைய வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக இருக்கவேண்டியது அவசியமாகும்

இந்நேரத்திலிருந்து:

 • இரண்டு குடும்பங்களிலிருந்து ஐந்து நபர்கள் வரை வீட்டு வெளிப்புறங்களில் சந்தித்துக்கொள்ளலாம்.
 • ‘பருவம் 4’-இல் ‘பாலர்’ (Prep) வகுப்பில் இருந்து 6-ஆம் வகுப்பு வரையும், VCE/VET/VCAL (வீசிஇ/வீஇடி/வீகால்) வகுப்புகளிலும், சிறப்புப் பாடசாலைகளிலும் படிக்கும் மாணவ-மாணவியர்கள் படி-நிலை முறையில் பாடசாலைக்குத் திரும்புவர்.
 • குழந்தை பராமரிப்பு மையங்கள் மீண்டும் திறக்கப்படும்
 • இன்னும் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் திறக்கப்படலாம்
 • வெளிப்புற நீச்சல் குளங்கள் மீண்டும் திறக்கப்படும், ஒரு பயிற்சியாளர் இரண்டு நபர்கள் வரைக்கும் பயிற்சியளிக்கலாம்.
 • ஐந்து வரைக்குமான நபர்களும், ஒரு மதத் தலைவரும் ஒன்றுகூட வெளிப்புற மதக் கூடல்கள் அனுமதிக்கப்படும்
 • வெளிப்புறங்களில், ஐந்து நபர்கள் வரை கலந்துகொள்ளும் திருமணங்கள் அனுமதிக்கப்படும் (மணமக்கள் இருவர், இரு சாட்சிகள் இதில் உள்ளடங்குவர்).
 • சட்டப்படியான காரணம் இல்லாமல் நீங்கள் விக்டோரிய மாநில ஊரகப் பகுதிகளுக்குப் பயணம் செய்தால், விக்டோரிய காவல்துறையினரால் உங்களுக்கு $4,957 வரைக்குமான அபராதம் விதிக்கப்படலாம். உங்களுடன் வசிக்காத நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஐந்திற்கு மேற்பட்ட நபர்கள் உள்ள குழுக்களில் வெளிப்புறங்களில் நீங்கள் சந்தித்தாலும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். பராமரிப்பு அளித்தல் போன்ற முறையானக் காரணம் ஏதேனும் இல்லாமல் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை நீங்கள் வீட்டிற்கு அழைத்தாலும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

மூன்றாம் படி-நிலை: 26 அக்டோபர்-இல் இருந்து – கடந்த 14 நாட்களில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையின் சராசரி ஐந்திற்குக் குறைவாக இருப்பின் (மாநில அளவில்), மற்றும் சுகாதார வல்லுனர்கள் ஒப்புதல் அளித்தால்.

இந்நேரத்திலிருந்து:

 • ஊரடங்கு உத்தரவு ஏதும் இருக்காது, மற்றும் வீட்டை விட்டு வெளியெ செல்வது அல்லது நீங்கள் பயணம் செய்ய இயலுமான தூரம் ஆகியவற்றைப் பற்றிய கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது
 • வெளிப்புறங்களில் 10 நபர்கள் வரைக்கும் ஒன்று கூடலாம்
 • மற்ற குடும்பத்திலிருந்து ஐந்து வரைக்குமான நபர்களை நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு அழைக்கலாம் இது ஒரே குடும்பமாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகும்
 • நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பின், மற்றும் சுகாதார வல்லுனர்கள் ஒப்புதல் அளித்தால் ஆண்டு 7 முதல் 10 வரை படிக்கும் மானவ-மாணவியர்களால் பாடசாலைக்குத் திரும்பிச் செல்ல இயலும்
 • கடைகள் மற்றும் முடித்திருத்தகங்கள் மீண்டும் திறக்கப்படும்.
 • வாடிக்கையாளர்களை வெளிப்புறங்களில் அமர்த்தி சேவை அளிக்கும் வகையிலும், ஒரு குழுவிற்கு 10 நபர்கள் என்ற வகையிலும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் (cafés) திறக்கப்படலாம்.
 • ஒருவரையொருவர் தொடாவெளிப்புற விளையாட்டுகள் ‘படி-நிலை முறை’யில் மீண்டும் துவங்கும். 18 வயதிற்குக் குறைந்தவர்களுக்கு வெளிப்புற விளையாட்டுகள் (ஒருவரையொருவர் தொடா மற்றும் தொடுவெளிப்புற விளையாட்டுகள்) ‘படி-நிலை முறை’யில் மீண்டும் துவங்கும்

கடைசிப் படி-நிலை: பொது சுகாதார அறிவுரைக்கு இணங்க, கடந்த 14 நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள் ஏதேனும் இல்லாமல் இருந்தால், மற்றும் சுகாதார வல்லுனர்கள் ஒப்புதல் அளித்தால்.

இந்நேரத்திலிருந்து:

 • 50 வரைக்குமான நபர்கள் வெளிப்புறங்களில் ஒன்று கூடலாம்
 • 20 வரைக்குமான நபர்களை நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு அழைக்கலாம்
 • அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருக்கும்.
 • வாடிக்கையாளர்களை உட்புறங்களில் அமர்த்தி சேவை அளிக்கும் வகையிலும், ஒரு குழுவிற்கு 20 நபர்கள் என்ற வகையில் 50 வரைக்குமான வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் விதத்திலும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் (Cafés) மீண்டும் திறக்கப்படலாம்
 • பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படும் விதத்தில், விளையாட்டுகள் மீண்டும் துவங்கப்படலாம். அனைத்து வயதினருக்கும் ஒருவரை ஒருவர் தொடு விளையாட்டுகள் மீண்டும் துவங்கும்
 • திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 வரைக்குமான நபர்கள் பங்குபெறலாம்.
 • ‘ஒரு நபருக்கு நான்கு சதுர மீட்டர்’ என்ற வகையில், பொது சமய வழிபாடுகள் மீண்டும் துவங்கும்

COVID Normal: 28 நாட்களுக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் யாரும் இல்லாவிட்டாலும், நோய்த்தொற்று உள்ளவர்கள் யாரும் இல்லாவிட்டாலும் (மாநில அளவிலான), தீவிர நோய்த்தொற்றுப் பரவல் குறித்த கவலை ஆஸ்திரேலியாவில் இல்லாவிட்டாலும், சுகாதார வல்லுனர்கள் ஒப்புதல் அளித்தாலும்.

இந்நேரத்திலிருந்து:

 • பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்படும் விதத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்
 • வீட்டிலிருந்து வேலை செய்துவந்தவர்கள் ‘படி-நிலை முறை’யில் மீண்டும் பணியிடத்திற்கு வேலைக்குத் திரும்புவர்
 • திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு வரையறைகள் இருக்காது
 • வீட்டில் கூடும் ஒன்றுகூடல்கள் மற்றும் வருகை புரிவார்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு வரையறைகள் இருக்காது.

விக்டோரிய மாநில ஊரகப் பகுதிகள்

மூன்றாம் படி-நிலை:

16 செப்டம்பர் 2020 அன்று இரவு 11.59 - இல் இருந்து, விக்டோரிய மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில்:

 • விக்டோரிய மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில், வீட்டை விட்டு வெளியே செல்வதற்கான காரணங்களிலோ அல்லது நீங்கள் பயணிக்க இயலுமான தூரத்திலோ கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது.
 • வெளிப்புறங்களில் 10 நபர்கள் வரைக்கும் ஒன்று கூடலாம்
 • மற்ற வீட்டவர்களை ஐந்து நபர்கள் வரை உங்களுடைய வீட்டிற்கு அழைக்கலாம். இவர்கள் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் பொழுது உங்களைப் பார்க்க வருவதற்காக பிறிதொரு வீட்டை மட்டுமே உங்களால் தெரிவுசெய்ய இயலும், அதாவது, இந்த ஒரு வீட்டைத் தவிர மற்ற வீட்டவர்கள் உங்களைப் பார்க்க வரக் கூடாது. இந்த ஐந்து நபர்களில் 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள் கணக்கில் வராது.
 • வாடிக்கையாளர்களை வெளிப்புறங்களில் அமர்த்தி சேவை அளிக்கும் வகையிலும், ஒரு குழுவிற்கு 10 நபர்கள் என்ற வகையிலும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் (cafes) திறக்கப்படலாம்.
 • வயதுவந்தவர்களுக்கு ஒருவரையொருவர் தொடா வெளிப்புற விளையாட்டுகள் ‘படி-நிலை முறை’யில் மீண்டும் துவங்கும். 18 வயதிற்குக் குறைந்தவர்களுக்கு வெளிப்புற விளையாட்டுகள் (ஒருவரையொருவர் தொடா மற்றும் தொடு வெளிப்புற விளையாட்டுகள்) ‘படி-நிலை முறை’யில் மீண்டும் துவங்கும்

கடைசிப் படி-நிலை: பொது சுகாதார அறிவுரைக்கு இணங்க, கடந்த 14 நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள் ஏதேனும் இல்லாமல் இருந்தாலும் (மாநிலம் அளவில்), சுகாதார வல்லுனர்கள் ஒப்புதல் அளித்தால்.

இந்நேரத்திலிருந்து:

 • 50 வரைக்குமான நபர்கள் வெளிப்புறங்களில் ஒன்றுகூடலாம்
 • 20 வரைக்குமான நபர்களை உங்களுடைய வீட்டிற்கு அழைக்கலாம்
 • அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும்
 • வாடிக்கையாளர்களை உட்புறங்களில் அமர்த்தி சேவை அளிக்கும் வகையிலும், ஒரு குழுவிற்கு 20 நபர்களாக 50 வரைக்குமான வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் விதத்திலும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் (cafes) மீண்டும் திறக்கப்படலாம்
 • பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படும் விதத்தில், விளையாட்டுகள் மீண்டும் துவங்கப்படலாம் அனைத்து வயதினருக்கும் ஒருவரை ஒருவர் தொடு விளையாட்டுகள் மீண்டும் துவங்கும்
 • திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 வரைக்குமான நபர்கள் பங்கு பெறலாம்
 • ‘ஒரு நபருக்கு நான்கு சதுர மீட்டர்’ என்ற வகையில், பொது சமய வழிபாடுகள் மீண்டும் துவங்கும்

COVID Normal: 28 நாட்களுக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் யாரும் இல்லாவிட்டாலும், நோய்த்தொற்று உள்ளவர்கள் யாரும் இல்லாவிட்டாலும் (மாநில அளவிலான), தீவிர நோய்த்தொற்றுப் பரவல் குறித்த கவலை ஆஸ்திரேலியாவில் இல்லாவிட்டாலும், சுகாதார வல்லுனர்கள் ஒப்புதல் அளித்தாலும்.

இந்நேரத்திலிருந்து

 • பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்படும் விதத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்
 • வீட்டிலிருந்து வேலை செய்துவந்தவர்கள் ‘படி-நிலை முறை’யில் மீண்டும் பணியிட வேலைக்குத் திரும்புவர்
 • திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு வரையறைகள் இருக்காது
 • வீட்டில் கூடும் ஒன்றுகூடல்கள் மற்றும் வருகை புரிவார்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு வரையறைகள் இருக்காது.

பாதுகாப்பாகவும் உடல் நலத்துடனும் இருப்பது எப்படி

கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) இன்னும் நம்மிடையே இருக்கிறது, மற்றும் இந்த நோய்த்தொற்று விரைவாகப் பரவக் கூடும். ஆகவே, உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுங்கள்

பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய எளிதான செயல்கள் பின்வருவன:

 • சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்திக் குறைந்தபட்சம் 20 வினாடி நேரத்திற்கு உங்களுடைய கைகளைக் கழுவுங்கள்
 • ஒரு திசுத்-தாளிற்குள்ளாகவோ அல்லது உங்களுடைய முழங்கை மடிப்பிற்குள்ளாகவோ இருமுங்கள் அல்லது தும்முங்கள்
 • மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1.5 மீட்டர் தூர இடைவெளி விட்டு விலகியிருங்கள்.
 • வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமெனில், உங்களுடைய மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகளை மறைக்கும் வகையிலான முகக்கவசம் ஏதேனும் ஒன்றை அணிந்துகொள்ளுங்கள்
 • உங்களுக்கான மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள வாருங்கள்
 • உங்களுக்கு உடல் நலம் சரியில்லையெனில், வீட்டிலேயே இருங்கள். குடும்பத்தாரைப் பார்க்கவோ, வேலைக்கோ போகாதீர்கள்
 • நோயறிகுறிகள் ஏதேனும் இருப்பின், நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளுங்கள், மற்றும் அதன் பிறகு நேராக வீட்டிற்குச் செல்லுங்கள்

உங்களுக்கு கிடைக்கும் உதவிகள்

உங்களுடைய நோயறிவுச் சோதனை முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது வருமான இழப்பைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், ‘கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) நோயறிவுச் சோதனைத் தனிமைப்பாட்டுக் கொடுப்பனவு’ (Test Isolation Payment) $450-ஐப் பெற நீங்கள் தகுதி பெறக்கூடும்

நோய்த்தொற்று உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அல்லது நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பின், $1,500 கொடுப்பனவு ஒன்றிற்கு நீங்கள் தகுதிபெறக் கூடும். மேலதிகத் தகவல்களுக்கு 1800 675 398-இல் ‘கொரோனா வைரஸ் உதவி இணைப்’பினை அழையுங்கள். மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், (0)-வை அழுத்துங்கள்.

நீங்களோ, உங்களுக்குத் தெரிந்த எவரேனும் பதற்ற நிலையிலோ அல்லது கவலைப்பட்டுக்கொண்டோ இருப்பின், 13 11 14-இல் Lifeline -ஐ அழையுங்கள், அல்லது 1800 512 348-இல் Beyond Blue (பியான்ட் ப்ளூ) -ஐ அழையுங்கள். மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், முதலில் 131 450-ஐ அழையுங்கள்.

தனிமையுற்றுவிட்டதாக நீங்கள் நினைத்தால், 1800 675 398-இல் ‘கொரோனா வைரஸ் உதவி இணைப்’பினை அழைத்து (3)-ஐ அழுத்துங்கள். உள்ளூர் உதவி சேவைகளுடன் உங்களைத் தொடர்புபடுத்த இயலுமான Australian Red Cross (ஆஸ்திரேலிய செஞ்சிலுவை) -ஐச் சேர்ந்த தொண்டர் ஒருவருடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும்

முகக்கவசங்கள்

சட்டப்படியான காரணம் ஏதேனும் இருந்தாலொழிய, 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய விக்டோரிய மாநில மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும். உதாரணமாக

 • உங்களுடைய முகத்தில் கடுமையான தோல் நோயோ, அல்லது சுவாசப் பிரச்சினையோ இருந்தால்
 • நீங்கள் காருக்குள் தனியாகவோ, அல்லது உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடனோ இருந்தால்
 • கடுமையான உடற்பயிற்சியை நீங்கள் மேற்கொண்டிருக்கும்போதும், முகக்கவசத்தை உடன் வைத்திருக்கவேண்டும்.
 • 11 அக்டோபர் இரவு 11.59 மணியில் இருந்து உங்களுடைய மூக்கு மற்றும் வாயை மறைக்கும் வகையிலான முக-மூடல் அல்லது முகக்கவசம் ஒன்றை நீங்கள் கட்டாயமாக அணியவேண்டும். நீங்கள் முக மறைப்பு ஒன்றை மட்டுமே அணியக் கூடாது.

நோயறிவுச் சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல்

கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19)-இற்கான நோயறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கிருப்பின், நீங்கள் அவசியமாக நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளவேண்டும் மற்றும் அதன் முடிவு வரும் வரை நீங்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். வேலைக்கோ அல்லது கடைகளுக்கோ போகாதீர்கள்

கொரோனா வைரஸ் நோயறிகுறிகளில் உள்ளடங்குவன:

 • காய்ச்சல், குளிர்க்காய்ச்சல் அல்லது வியர்த்தல்
 • இருமல் அல்லது தொண்டை வலி
 • மூச்சுத்திணறல்
 • மூக்கு ஒழுகுதல்
 • வாசனைத் திறன் அல்லது சுவைத் திறன் இழப்பு

கொரோனா வைரஸ் நோயறிவுச் சோதனை அனைவருக்கும் இலவசமாகச் செய்யப்படும். மெடிக்கேர் அட்டை (Medicare card) இல்லாதவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், புலம்பெயர்த் தொழிலாளர்கள் மற்றும் அடைக்கலம் நாடிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதில் அடங்குவர்

கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) நோய்த்தொற்று உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், நீங்கள் அவசியமாக உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டும். மேலதிகத் தகவல்களுக்கு,: ‘கொரோனா வைரஸ் (COVID-19) நோய்த்தொற்று உங்களுக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் நீங்கள் செய்யவேண்டியது என்ன’ என்ற ஆவணத்தைத் திறந்து (WORD document) பாருங்கள்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) நோய்த்தொற்று உள்ள யாருடனாவது நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தவரெனில் 14 நாட்களுக்கு நீங்கள் கண்டிப்பாக நோய்க்காப்புத் தனிமையில் இருக்க வேண்டும். மேலதிகத் தகவல்களுக்கு, கொரோனா வைரஸ் (கோவிட்-19) (COVID-19) நோய்த்தொற்று உள்ள யாருடனாவது நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தவரெனில் நீங்கள் செய்யவேண்டியது என்ன' என்ற ஆவணத்தைத் திறந்து (WORD document) பாருங்கள்.

மூலவளங்கள்

கீழேயுள்ள வளங்களைத் தயவு செய்து பயன்படுத்துங்கள், மற்றும் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், அல்லது மற்ற சமூகத் தொடர்புவலைகள் மூலமாகக் உங்களுடைய சமூகத்தினருடன் இவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நோயறிவுச் சோதனை மற்றும் தனிமைப்படுத்தல்

பாதுகாப்பாக இருத்தல்

உதவி பெறல்

முகக்கவசங்கள்